×

வெட்டுவாடி கிராம மக்கள் பட்டா கேட்டு 2வது நாளாக உண்ணாவிரதம்

பந்தலூர், ஜூலை 12 :பந்தலூர் அருகே எருமாடு வெட்டுவாடி கிராமமக்கள் பட்டா வழங்கக்கோரி நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்டபட்ட எருமாடு வெட்டுவாடி கிராமத்தில் கடந்த பல வருடங்களாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என நேற்று இரண்டாவது நாளாக கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உண்ணாவிரதம் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் உண்ணாவிரத்தை கைவிட மறுத்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று எருமாடு பகுதிக்கு வந்து மாவட்ட கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா உண்ணாவிரதம் இருப்பவர்களிடம் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அப்பகுதிக்கு செல்லாமல் சென்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது. கோரிக்கைகள் குறித்து தொடர் உண்ணாவிரதம் போராட்டம் தொடரும் என கிராமமக்கள் தெரிவித்தனர்

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி