கோைவயில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

கோவை, ஜூலை 12:கோவை மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 20மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் காலதாமதமாக பருவமழை துவங்கியுள்ளது. இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணி அடிவாரத்தில்  கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 97மி.மீ மழையும், அடிவாரத்தில் 11மி.மீ மழையும் பதிவானது.  அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 13.45 அடியாக உயர்ந்துள்ளது. மழை அளவு குறைந்துள்ளதால் சித்திரைச்சாவடி அணைக்கட்டிற்கு குறைந்த அளவிலான தண்ணீர் வருகிறது. மேலும், மதுக்கரை, குனியமுத்தூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், நகரின் ஒரு சில இடங்களிலும் நேற்று சாரல் மழை இருந்தது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கான காரணிகள் இருப்பதால் கோவை மாவட்டத்தில் பரவலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து வேளாண் காலநிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “தமிழகத்தில் பருவமழை பெய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், எதிர்பார்க்கப்பட்ட மழை கிடைக்கவில்லை. தற்போது, ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்கிறது. கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 20மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

Related Stories: