கோவையில் திமுக செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது

கோவை, ஜூலை 12: கோவை மாநகர் மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். இதில், கோவை மாவட்டத்தில் திமுக வளர்ச்சி பணிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை  செயற்குழு, பொதுக்குழு  உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி கழக   செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட  அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள்  அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கார்த்திக் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: