இருசக்கர வாகன மானிய திட்டத்தில் கோவையில் 1,995 பேர் விண்ணப்பம்

கோவை, ஜூலை 12:   தமிழக அரசு சார்பில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு  இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக  ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீதம் மானியமாக  வழங்கப்படுகிறது. 2017 ம் நிதியாண்டு முதல் இத்திட்டம் தமிழ்நாடு மகளிர்  மேம்பாட்டு இயக்கம் மூலம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.   இதில் இந்த ஆண்டு மானியம் கேட்டு  மாவட்டத்தில் 1,995 பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர்.  இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்க திட்ட அலுவலர் கூறியதாவது:   மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானிய திட்டத்தில்  ஆண்டுக்கு 4 ஆயிரத்து 49 பயனாளிகளுக்கு மானியம் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2017-18ம் ஆண்டு இலக்கு  முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2018-19ம் நிதியாண்டில் 70 சதவீத பயனாளிகள்  மட்டுமே மானியம் பெற்றுள்ளனர். மேலும் கடைசி நிமிடங்களில் பல்வேறு  காரணங்களால் மானியத்தொகை வேண்டாம் என நிராகரிக்கும் நிலையும்  காணப்படுகிறது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 30 சதவீத மானியம்  வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் விண்ணப்பிக்க அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1,995 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்  தகுதியானவர்களை தேர்வு செய்து மானியம் அளிக்கப்படும் என்றார்.

Related Stories: