காதல் திருமணம் செய்த மாணவி போலீசில் தஞ்சம்

ஈரோடு, ஜூலை 12: ஈரோடு அருகே புஞ்சை லக்காபுரம் காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (23). இவர், டிப்ளமோ படித்து விட்டு தற்போது ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ஈரோடு அருகே சின்னியம்பாளையம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் குகனா (19). இவர், திண்டலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். விஜயகுமாரும், குகனாவும் பள்ளியில் ஒன்றாக படித்து வந்தனர். இதனால், இவர்களுக்கு இடையே நட்பு இருந்தது. இந்த நட்பு காதலாக மாறி இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறினர். தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பாதுகாப்பு கேட்டு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து  மகளிர் போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: