தொடர் நடவடிக்கையால் விபத்து குறைந்துள்ளது

கோபி, ஜூலை 12: தொடர் நடவடிக்கையால் விபத்து, குற்றச்சம்பவம் குறைந்துள்ளதாக ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் தெரிவித்தார்.

காவல்துறையில் பயிற்சி முடித்த பெண் காவலர்கள் 25 பேர் கோபி காவல் துணை கோட்டத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களது பயிற்சியை ஆய்வு செய்த எஸ்பி சக்தி கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது: தொடர் நடவடிக்கையால் கடந்த இரண்டு ஆண்டில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது. கொள்ளை, திருட்டை தடுக்க இரவு ரோந்துபணியில் 136 பீட் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
Advertising
Advertising

கடந்த ஒரு மாதத்தில் பெண்கள், முதியவர்கள் பாதுகாப்பு செயலி மூலம் பெறப்பட்ட 550 புகார் மனுவில் 524 மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் செல்லும் போது சாலை போக்குவரத்தை சீரமைப்பதில் ஈரோடு மாவட்டம் இரண்டாவது  இடத்தில் உள்ளது.

இவ்வாறு சக்தி கணேசன் கூறினார்.

Related Stories: