10 தாலுகாவில் வருவாய் திட்ட முகாம்

ஈரோடு, ஜூலை 12: ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவில் இன்று (12ம் தேதி) வருவாய்த்துறை திட்ட முகாம் மற்றும் சிறப்பு குறைதீர் கூட்ட முகாம் நடக்கிறது. அதன்படி, ஈரோடு தாலுகாவில் ஆட்டையாம்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், பெருந்துறை தாலுகாவில் பாலத்தொழுவு விஏஓ அலுவலகத்திலும், மொடக்குறிச்சி தாலுகாவில் கஸ்பாபேட்டை விஏஓ அலுவலகத்திலும், கொடுமுடி தாலுகாவில் சகாயபுரம் சமுதாய கூடத்திலும் நடக்கிறது.பவானி தாலுகாவில் ஒரிச்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், சத்தி தாலுகாவில் பெரியகள்ளிப்பட்டி விஏஓ அலுவலகத்திலும் கோபி தாலுகாவில் வெள்ளாங்கோவில் ஊராட்சி அலுவலகத்திலும் நடக்கிறது. அந்தியூர் தாலுகாவில் ஒட்டப்பாளையம் விஏஓ அலுவலகத்திலும், தாளவாடி தாலுகாவில் மகாராஜன்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், நம்பியூர் தாலுகாவில் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: