மேட்டூரில் கொட்டி தீர்த்த கன மழை

மேட்டூர், ஜூலை 12: மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளத்தூர், குஞ்சாண்டியூர், புதுச்சாம்பள்ளி, நங்கவள்ளி, வனவாசி ஆகிய இடங்களில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு, திடீரென கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன், கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 45 நிமிடம் பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மலை பகுதியில் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வந்தனர். ெதாடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை பெய்த மழையால், இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertising
Advertising

Related Stories: