இடைப்பாடி அருகே இருதரப்பு மோதல் அபாயத்தால் கோயில் விழாவுக்கு போலீஸ் தடை

இடைப்பாடி, ஜூலை 12: இடைப்பாடி அருகே இருதரப்பு மோதல் அபாயத்தால், மாரியம்மன் கோயில் திருவிழா நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

இடைப்பாடி அருகே, வெள்ளரிவெள்ளி ஊராட்சி வேட்டுவப்பட்டியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் திருவிழா நடத்துவது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டு பொங்கல் வைத்து இன்று(12ம் தேதி) திருவிழா நடத்தலாம் என ஊர்கவுண்டர் மணி தெரிவித்தார். ஆனால், இதற்கு பூசாரி அர்த்தனாரி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கேசவன் தலைமையில், பூசாரி மற்றும் ஊர்கவுண்டர் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், சுமூக முடிவு கிட்டாததால், விழாவை வேறொரு தேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று இடைப்பாடி போலீசார் மாரியம்மன் கோயில் விழா நடத்த தடை விதித்து, ேகாயில் முன்கட்டிய ரேடியோ, பந்தல் மற்றும் அலங்கார விளக்குகளை அகற்றினர். இதனிடையே, ஊர் கவுண்டர் மற்றும் பூசாரி தரப்பில் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளதால், சங்ககிரி டிஎஸ்பி அசோக்குமார், இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories: