உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் ‘இயற்கை பெக்ஸ்’ கண்காட்சி துவக்கம் 31ம் தேதி வரை நடக்கிறது

திருச்சி, ஜூலை 12: உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இயற்கை பெக்ஸ்-2019 கண்காட்சி நேற்றுமுதல் துவங்கப்பட்டது. இக்கண்காட்சி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது உலக இயற்கை பாதுகாப்பு நாள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 28ம் தேதி ெகாண்டாப்படுகிறது. இதனை ெகாண்டாடும் வகையில் இயற்கை பெக்ஸ்-2019 என்ற பெயரில் சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நேற்று திருச்சி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில் நடந்தது. இதில் மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் சுமதி கலந்துகொண்டு இக்கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். மத்திய மண்டல அஞ்சல்துறை இயக்குநர் தாமஸ்லூர்துராஜ் முன்னிலை வகித்தார்.

இதில் நீர்வளம், நில வளம் போன்ற இயற்கை வளங்கள் பாதுகாப்பு, ஸ்வச் பாரத் திட்டம், பருவநிலை மாற்றம், பூக்கள், பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றி சிறப்பு அஞ்சல் தலைகள், மூத்த அஞ்சல் தலை சேகரிப்பாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியானது வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: