அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரற்ற வினியோகம் மூலைக்கரைப்பட்டியில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு

நாங்குநேரி, ஜூலை 12:  மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் அதிகாரிகளின் கவனக்குறைவால் சீரற்ற குடிநீர் வினியோகம் நடந்து வருவதால் பல இடங்களில் குடிநீரின்றி மக்கள் தவித்து வருகிறார்கள். மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் உள்ள சின்ன மூலைக்கரை, நகல்குளம், சொக்கலிங்கபுரம், சங்கர்நகர், பெருமாள் நகர், லெத்திகுளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.குடிநீர் வினியோகத்தில் பேரூராட்சி அதிகாரிகள் சரியான கவனம் செலுத்துவதில்லை எனவும் அதனால் பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தெருக்களிலுள்ள பொதுக் குழாய்களில் நல்லிகள் பொருத்தப்படாததால் கட்டுப்பாடின்றி குடிநீர் வீணாகி வருகிறது. சொக்கலிங்கபுரத்தில் மின் மோட்டார் பழுதால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்கத்து ஊர்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய அவல நிலை உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிகின்றனர். எனவே மூலைக்கரைப்பட்டி பேரூராட்சியில் குடிநீர் வினியோகத்தில் தனிக்கவனம் செலுத்தி அனைவருக்கும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: