இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமனம் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தென்காசி, ஜூலை 12:  தென்காசியில் நகர திமுக மற்றும் நகர இளைஞரணி சார்பில் மாநில திமுக இளைஞரணி  செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதை வரவேற்று பட்டாசு  வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர இளைஞரணி  அமைப்பாளர் ராம்துரை தலைமை வகித்தார். மாவட்ட விவசாய தொழிலாளர் அணி  அமைப்பாளர் கோமதிநாயகம், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், பைசல்,  ரகுமான் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சாதிர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Advertising
Advertising

மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் சீவநல்லூர் சாமித்துரை,  ஜீவானந்தம், மாரிமுத்து, வேலுச்சாமி, முத்துக்குமாரசாமி, சண்முகநாதன், ரவி,  காதர்அண்ணாவி, வக்கீல்கள் சசிகுமார், ஜெபா, நகர நிர்வாகிகள் சொக்கலிங்கம்,  பால்ராஜ், நடராஜன், சேக்பரீத், அப்துல்கனி, பாலா, கோபால்ராம், ராம்ராஜ்,  மோகன்ராஜ், வடகரை ராமர், மைதீன்பிச்சை, சித்தார்த்தன், முருகேசன்,  சுலைமான், மாரிமுத்து, செய்யது அன்பியா, அஷ்ரப்அலி, கனி, முகம்மது அலி,  குமார், நாகூர்மீரான், சுப்பிரமணியன், கட்டியப்பா, மணிராஜ், ராமகிருஷ்ணன்  உட்பட பலர் கலந்து கொண்டனர். இசக்கித்துரை நன்றி கூறினார்.

Related Stories: