5 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு 5 இடங்களில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி, ஜூலை 12: தூத்துக்குடி,  கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், சாத்தான்குளம்  உள்ளிட்ட 5 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் மெகா லோக் அதாலத் நாளை (13ம் தேதி) நடக்கிறது. இதில் சுமார் 5 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விஸ்வநாத் தெரிவித்தார். இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: தேசிய  சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்படி, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு  வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனப்படும் மெகா லோக் அதாலத் நாளை (13ம் தேதி) நடக்கிறது. இத்தகைய மெகா லோக் அதாலத் ஆண்டுக்கு 4  முறை நடத்தப்படும். இதன்படி இந்தாண்டுக்கான 2வது மெகா லோக் அதாலத் இம்மாவட்டத்தில் தூத்துக்குடி,  கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய 5  இடங்களில் நாளை நடக்கிறது. இதில் மொத்தம் 18 அமர்வுகள் மூலம் வழக்குகள்  விசாரிக்கப்படுகின்றன.

இந்த அமர்வுகளில் பணியில் உள்ள நீதிபதிகள், ஓய்வு  பெற்ற நீதிபதிகள், சமூக ஆர்வலர்கள் அமர்ந்து வழக்குகளை விசாரித்து தீர்ப்பு  வழங்க உள்ளனர். இந்த அமர்வு காலை 10 மணிக்கு துவங்கி, வழக்குகள் முடியும்  வரை நடக்கிறது.  தூத்துக்குடி மாவட்டத்தில் தீர்வு காணப்படாமல் உள்ள  சுமார் 5 ஆயிரம் வழக்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில்  இருதரப்பினரின் சம்மதத்தின் பேரில் தீர்வு காணப்படும். ஏற்கனவே கடந்த  மார்ச் மாதம் நடந்த லோக் அதாலத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும்  தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை கோர்ட்டில் நிலுவையில் உள்ள  உரிமையியல் வழக்குகளில் ரூ.79 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான 10  வழக்குகளுக்கும், மோட்டார் வாகன வழக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 40  ஆயிரம் வரையிலான 25 வழக்குகளுக்கும், என  மொத்தம் ரூ.1 கோடியே 91 லட்சத்து  98 ஆயிரம் மதிப்பிலான  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

 இதே  போல் கோர்ட் விசாரணைக்கு வரும் முன்பே தீர்வு காணப்படும் வங்கி  சார்ந்த வழக்குகளில் இதுவரை 756 வழக்குகள் எடுக்கப்பட்டு 102 வழக்குகளில்  தீர்வு காணப்படஉள்ளது. இதன் மூலம் ரூ.80 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான  வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில்  எடுக்கப்பட்ட 210 வழக்குகளில்  36 வழக்குகளுக்கும், கோவில்பட்டியில்   எடுக்கப்பட்ட 128 வழக்குகள் எடுக்கப்பட்டு 8 வழக்குகளுக்கும்,  திருச்செந்தூரில் 87 வழக்குகள் எடுக்கப்பட்தில்  22 வழக்குகளுக்கும்,  வைகுண்டத்தில் எடுக்கப்பட்ட 331 வழக்குகளில்  36 வழக்குகளுக்கும்  தீர்வு காணப்பட்டு உள்ளன. மொத்தம் இதுவரை ரூ.2 கோடியே 72 லட்சத்து 91  ஆயிரம் மதிப்பிலான வழக்குகளில் தீர்வு காணப்பட்டு உள்ளது.  இந்த மெகா லோக்  அதாலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்காடிகளும் பங்கேற்க  வேண்டும். இது தொடர்பாக வழக்காடிகளுக்கு ஏற்கனவே தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும்,  விளம்பர பதாகைகள் வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு  வட்டாரத்திலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வக்கீல்களுடன் ஆலோசனை  கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. வங்கி, போக்குவரத்து, இன்சூரன்ஸ்  அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.  எனவே, நாளை நடைபெறும் தேசிய  மக்கள் நீதிமன்றம் மூலம் அதிகமான வழக்குகளில் தீர்வு காணப்படும் என்று  நம்புகிறோம்’’ என்றார்.  பேட்டியின் போது மகிளா கோர்ட் நீதிபதி குமார சரவணன்,  கூடுதல் முதன்மை மாவட்ட நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதித்துறை  நடுவர் ஹேமா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி சாமுவேல் பெஞ்சமின்,  நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி முருகேசன் உடனிருந்தனர்.

வட்டி தள்ளுபடி

நாளை நடக்கும் மெகா லோக் அதாலத்தில் சுமார் ரூ.10 கோடி மதிப்பிற்கும்  அதிகமான வழக்குகளுக்கு தீர்வு காண வாய்ப்பு உள்ளது. இதனால்  வழக்காடிகள், பணம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்பநல வழக்கு, மோட்டார் வாகன  விபத்து வழக்குகளில் உடனடியாக தீர்வு காணலாம். இதில் தீர்வு கண்டால்  மேல்முறையீடு கிடையாது. சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்ந்தவர்கள்   செலுத்தியுள்ள கோர்ட் கட்டணம் உடனடியாக திரும்பத் தரப்படும்.  வங்கியில் கடன்  பெற்று உள்ள மாணவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் முழுமையாக வட்டி  தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான

Related Stories: