மாணவர்கள் பயன்பெறுவார்கள் கோவில்பட்டியில் முதல்வருக்கு வரவேற்பு

கோவில்பட்டி, ஜூலை 12:  நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் பாப்புலர் முத்தையா இல்ல திருமண விழா பாளையங்கோட்டை கேடிசி நகர் மாதா மாளிகையில் நேற்று காலை நடந்தது. மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் நெல்லைக்கு வந்துகொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி விலக்கில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ., கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர் விஜயபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
Advertising
Advertising

Related Stories: