மெஞ்ஞானபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்குபதிவு

உடன்குடி, ஜூலை 12:   மெஞ்ஞானபுரம்  அடுத்த தாய்விளையில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வலியுறுத்தி தாய்விளையை  சேர்ந்த ரமேஷ் என்பவரது தலைமையில் பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் திரண்டு வந்து மெஞ்ஞானபுரம் - நாசரேத் சாலையில் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்துசென்ற தட்டார் மடம்  இன்ஸ்பெக்டர் சிவசங்கர், மெஞ்ஞானபுரம் எஸ்ஐ  அமலோற்பவம்,  திருப்பதி, நாசரேத் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி மற்றும் போலீசார் சமரசப்படுத்தினர்.

Advertising
Advertising

தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்துச் சென்றனர்.  இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில்  ஈடுபட்டதாக ரமேஷ் உள்ளிட்ட 50 பேர் மீது மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: