சித்தர் மடத்தில் குப்பைகள் எரிப்பு மரங்கள் அழியும் அபாயம்

புதுச்சேரி, ஜூலை 12:    புதுவை தட்டாஞ்சாவடி கம்பளிசாமி சித்தர் மடம், மரங்கள் நிறைந்த இயற்கை சூழலுடன் உள்ளது. ஆனால் மடத்தில் உள்ள குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் மரங்களை அழியும் நிலையில் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பொதுநல சமூக பேரவை செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், கம்பளிசாமி சித்தர் மடத்தில் உள்ள மரங்கள், சமீபகாலமாக குப்பைகளை போட்டு தீயிட்டு எரிப்பது வாடகையாக உள்ளது. அதேபோல், மரத்தின் அடியில் மண்ணை கூட்டி வேர் தெரியும் அளவுக்கு சுத்தம் செய்கிறேன் என்ற போர்வையில் இத்தகைய செயல் நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை சூழல் அழிந்ததால் சுத்தமான காற்று, நல்ல குடிநீர் கிடைக்காமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். இதே நிலை நீடித்தால் புதுவை மாநிலம் இயற்கையை தேட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவோம் என கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: