பொதுமக்கள் அவதி தந்தை, மகனை தாக்கிய 4 பேர் கைது

கும்பகோணம், ஜூலை 12: கும்பகோணம் அருகே தந்தை, மகனை தாக்கிய 4 பேர்் கைது செய்யப்பட்டனர்.கும்பகோணம் அடுத்த பாப்பாக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (47). இவரது மகன் விக்னேஷ் (20). பூக்கடை வைத்துள்ளனர். குமாரின் நண்பர் சவுந்தரராஜனின் உறவினர், தன்னை 4 பேர் தாக்க வருவதாகவும், உயிரை காப்பாற்ற வேண்டுமென குமாரிடம் அடைக்கலம் கேட்டார். இதனால் சவுந்தரராஜனின் மைத்துனருக்கு கடைக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு குமார் அடைக்கலம் கொடுத்தார்.அப்போது அங்கு வந்த அம்பேத்கர் நகரை சேர்ந்த கமலேஷ், தினேஷ், பிரசாத், பொண்மணி ஆகியோர் சவுந்தரராஜனின் உறவினருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி குமாரையும், விக்னேஷையும் சரமாரியாக உருட்டுக்கட்டையால் தாக்கியதுடன் பூக்கடையை அடித்து நொறுக்கினர். படுகாயமடைந்த குமார், விக்னேஷ் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: