கலசபாக்கம் அருகே பைக் விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு சிகிச்சை அளித்த டாக்டர்

கலசபாக்கம், ஜூலை 12: ேவலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கவுதம்(25), இவர் நேற்று வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றார். அப்போது போளூர் பைபாஸ் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். அப்போது, அவ்வழியாக காரில் வந்த கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மணிகண்டபிரபு, விபத்தில் சிக்கியவரை மீட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து ேபாளூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். பைக் ஓட்டிய வாலிபர் ஹெல்மெட் அணிந்து வந்ததால், தலையில் எவ்வித காயமும் ஏற்படவில்லை. விபத்தில் சிக்கிய வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


Tags :
× RELATED தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு