×

தூர்ந்துபோன நீர்வரத்து கால்வாய்களால் மழை பெய்தாலும் மிருகண்டா அணை நிரம்புவதில் சிக்கல் சீரமைக்க மத்திய குழு பரிந்துரை செய்யுமா?

கசபாக்கம், ஜூலை 12: மழை பெய்தாலும் தூர்ந்துபோன நீர்வரத்து கால்வாய்களால் மிருகண்டா அணை நிரம்புவதில் சிக்கல் உள்ளது. இதனை சீரமைக்க மத்திய குழுவினர் பரிந்துரை செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் வறட்சியின் பாதிப்பு வரலாறு காணாத அளவில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக நம்பியுள்ள கலசபாக்கம் பகுதிகளில் ஏரிகள், குளங்கள், பாசன கிணறுகள் அனைத்தும் வறண்டுள்ளது.கலசபாக்கம் மக்களின் முக்கிய நீராதாரமாக அமைந்திருக்கும் மேல்ேசாழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்டா அணை தற்போது வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 23 அடி, கொள்ளளவு 87.23 மி.க.அடி. இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் 1,292 ெஹக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதன் மூலம் 119.16 டன் உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், மிருகண்டா அணை நிரம்பினால் கேட்டவரம் பாளையம், சீனந்தல், காந்தப்பாளையம், சிறுவள்ளூர், ஆதமங்கலம்புதூர், எலத்தூர், எர்ணாமங்கலம், சேங்கபுத்தேரி உள்ளிட்ட 17 ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது.

தற்போது, அணை வறண்டு உள்ளதால், சுமார் 9,886 பாசன கிணறுகளின் நீராதாரம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், 14,606 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மிருகண்டா அணையிலிருந்து செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் முழுமையாக தூர்ந்துபோய் காணப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. நாடு முழுவதும் வறட்சியான மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள 255 மாவட்டங்களை கண்டறிந்து நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த `ஜல் சக்தி அபியான்'''' என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 1ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது. இதையொட்டி மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் மிருகண்டா அணை மற்றும் நீர்வரத்து கால்வாய்கள், அருகில் உள்ள விவசாய கிணறுகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, மிருகண்டா அணை மற்றும் விவசாய கிணறுகள் வறண்டு போய் உள்ளதை பார்த்து மத்திய குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ஏரி நீர்வரத்து கால்வாய்களும் தூர்வாராமல் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே, நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக கலசபாக்கம் தாலுகாவில் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், தென்மேற்கு பருவமழை, வடமேற்கு பருவமழை பெய்வதற்கு முன்பு மிருகண்டாஅணை மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க மத்திய குழுவினர் பரிந்துரை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...