ஆரணி அருகே நூதன முறையில் மணல் கடத்திய வாலிபர் கைது

ஆரணி, ஜூலை 12: ஆரணி அருகே லோடு ஆட்டோவில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் மணலை பதுக்கி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.ஆரணி மற்றும் தச்சூர், விண்ணமங்கலம் பகுதிகளில் உள்ள செய்யாற்று படுகையில் மணல் கடத்தப்படுவதாக தாலுகா போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், ஆரணி தாலுகா போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தச்சூர் செய்யாற்று படுகையில் இருந்து வந்த லோடு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டனர். அதில் தவிடு மூட்டைகள் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதனை அகற்றி பார்த்தபோது மூட்டைகளுக்கு கீழே மணல் பதுக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவுடன் மணலை ேபாலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவர் தச்சூர் மேட்டூர் பகுதியை சேர்ந்த கோபி(27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தண்டராம்பட்டு அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை கலெக்டர் ஆய்வு