திருமண நாளில் மனுத்தாக்கல்

அதிமுக கூட்டணியின் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி அவர் மனைவி லலிதாலட்சுமியுடன் வேலூர் செல்லியம்மன் கோயிலில் வேட்பு மனுவுடன் சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வந்து மனுத்தாக்கல் செய்தார். பின்னால் நடந்து வந்த மனிதன் நாட்றம்பள்ளியை சேர்ந்த மனிதன்(50) என்பவர் உலக அமைதியை வலியுறுத்தி பின்பக்கமாக நடந்து வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர் கடந்த 28 ஆண்டுகளாக பின்பக்கமாக நடந்து கொண்டிருக்கிறார். இவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது வயதை 2 கோடியே 16 லட்சத்து 6 ஆயிரத்து 668 நிமிடங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.மேலும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பத்மராஜன்(61) நேற்று சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர் மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி தேர்தல்களில் இந்தியாவில் பல மாநிலங்களில் பல தொகுதிகளில் பல முக்கியப்புள்ளிகளை எதிர்த்து சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். நேற்று 204வது முறையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி என்ற பெயரில் காந்தி வேடமணிந்து ரமேஷ்(39), தருமபுரியை சேர்ந்த அக்னி ராமச்சந்திரன்(38), ஆம்பூர் அடுத்த ெகால்லைமேடு வெங்கடேசன்(52) ஆகியோர் சுயேட்சைகளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Related Stories: