குடியிருப்பு பகுதிகளில் சாயக்கழிவு நீர் வெளியேற்றினால் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்

திருப்பூர், ஜூலை 11:திருப்பூர் சாய பட்டறை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நாகராஜ், பொதுச்செயலாளர் முருகசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.1,100 கோடி மதிப்பில் பூஜிய நிலை சுத்திகரிப்பு நிலையம் நவீன தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது.  இதன் உறுப்பினர்களாக 500க்கு மேற்பட்ட சாய பட்டறை உரிமையாளர்கள் உள்ளனர். இது தவிர 100 தனியார் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகிறது. சாயபட்டறைகளுக்கு தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. சாயம் கலந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து  மீண்டும் அதே தண்ணீரை பயன்படுத்துகிறோம்.  இந்நிலையில் ஒரு சிலர் குடியிருப்பு பகுதிகளில் பெரிய காம்பவுண்ட் சுவர் உள்ள  குடோன்களில் திருட்டுத்தனமாக துணிகளுக்கும், காஜா-பட்டன், பிரிண்டிங், எலாஸ்டிக்  ஆகியவற்றிக்கு சாயமேற்றி வருகின்றனர்.

Advertising
Advertising

 இவர்கள் இரவு நேரங்களில் சாக்கடை, நீர் வழி ஓடைகளில் திறந்து விடுவதால் சாய கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதனால், விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. பல கோடி செலவு செய்து சாய கழிவு நீரை பூஜிய நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் அதே தண்ணீரை பயன்படுத்தியும் செய்யாத  செயல்களுக்கு தண்டனை அனுபவிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் செய்யும் பாதக செயல்களுக்கு அனைவரும் பலிகடா ஆகிறோம். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள  குடியிருப்பு பகுதிகளில் அரசின் அனுமதியின்றி துணிகளுக்கு சாயமேற்றுதல், பட்டன்-ஜிப் டையிங், சாயங்களின் தன்மையை பரிசீலினை செய்யும் பரிசோதனை கூடங்கள், சிறிய வின்ஞ், சேம்பிள் ைடயிங் ஆகியவற்றிலிருந்து சாய கழிவு நீர் வெளியேறுகிறது.

 இது குறித்து அப்பகுதி பொது மக்களுக்கு தான் முழுமையாக தெரியும். தவறு செய்யும் சாய ஆலைகள் குறித்து சங்கத்திற்கு 9003969444, 9442289694 ஆகிய எண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளவும். பொது மக்கள், துப்புரவு தொழிலாளர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் இது குறித்து தகவல் கிடைத்தால் உடனே தகவல் கொடுத்து உதவவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: