நீர்மேலாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு

உடுமலை,ஜூலை11:உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் நர்சரி பள்ளி,மெட்ரிக் பள்ளி,தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை விழிப்புணர்வு பற்றிய ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது.உடுமலை கல்வி மாவட்ட அளவிலான இக்கருத்தரங்கை மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். உடுமலை பசுமை மாறா இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் கோபாலகிருஷ்ணன்,பாரத் கேரியர் டெவலப்மெண்ட் சென்டர் இயக்குனர் சிவக்குமார்,ஆர்.ஜி.எம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஞானய்யா,குடிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி,உடுமலை வட்டார கல்வி அலுவலர்கள் பிரிட்டோ, சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

 கருத்தரங்கில் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்மேலாண்மை,மரம் நடுதலின் அவசியம் குறித்தும் அதற்கான வழிகள் குறித்தும் காணொலி காட்சி உதவியுடன் விளக்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு, பள்ளிகளில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பு அமைக்கும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. கருத்தரங்கில் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும், சுற்றுச்சூழல் தேசிய பசுமைப்படை மன்ற பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர். உடுமலை கல்வி மாவட்ட பள்ளித்தணை ஆய்வாளர் கலைமணி நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார்,ஆசிரியர்கள் சின்னராசு,தைலியண்ணன்,ராசேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: