அலங்கை அருகே அழகாபுரியில் கோயில்களில் வருடாபிஷேக விழா

அலங்கநல்லூர், ஜூலை 11: மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் அருகே அழகாபுரியில் உள்ள வரதராஜபெருமாள், செல்லாயி அம்மன் கோவில்களில் வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கங்கை, காவிரி, அழகர்மலை, காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தகுடங்கள் கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் வைக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தது.தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.  அவர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழா ஏற்பாடுகளை கிராம மரியாதைகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: