திருப்பரங்குன்றம் அருகே சட்டவிரோதமாக விற்ற 401 மதுபாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது

திருப்பரங்குன்றம், ஜூலை 11: திருப்பரங்குன்றம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 401 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர். இங்குள்ள ஒரு டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து அந்த பாரில் மதுவிலக்கு போலீசார் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்ட நிலையூர் அய்யனார் காலனியை சேர்ந்த இளங்கோ(38), காரியாபட்டியை சேர்ந்த சின்னச்சாமி (44) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 353 குவார்ட்டர் பாட்டில்களும், 48 ஆஃப் பாட்டில்களும் என மொத்தம் 401 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertising
Advertising

Related Stories: