சிலிண்டர் வெடித்து படுகாயம் சிகிச்சையில் இருந்த டிரைவர் உயிரிழப்பு

திருமங்கலம், ஜூலை 11: வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் படுகாயமடைந்த லாரி டிரைவர் மருத்துவமனையில் சிகிச்ைச பலனின்றி நேற்று உயிரிழந்தார். திருமங்கலம் அடுத்துள்ள கே.வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் குணசேகரன்(53). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இவரது குடும்பத்தினர் திருப்பதிக்கு சென்றனர். அவர்களை விருதுநகரில் ரயில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பிய குணசேகரன் அடுப்பு பற்றவைக்க முயலும் போது காஸ் சிலிண்டர் வெடித்து படுகாயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: