ரோல் பால் ஸ்கேட்டிங் போட்டி தங்கம் வென்று மாணவி சாதனை

மதுரை, ஜூலை 11: மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி, ‘ரோல் பால் ஸ்கேட்டிங்’கில் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவி அம்ரிதாமாயா(13). 8ம் வகுப்பு படித்து வரும் இவர், சென்னையில் நடந்த ‘ரோல் பால் ஸ்கேட்டிங்’ போட்டியில் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கலெக்டரை சந்தித்த மாணவி அம்ரிதாமாயா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தந்தை சிவராஜன், மீனாட்சி கோயில் ஊழியர். தாயார் ஜோனட் வக்கீல். ஸ்கேட்டிங் அணிந்தபடி, பந்தை தட்டி கீழே இருக்கும் கூடையில் போடும் வகையிலான ‘ரோல் பால் ஸ்கேட்டிங்’ போட்டியில் மாநில அளவில் சாதனை புரிந்துள்ளேன். வரும் ஆக.31ல் குஜராத்தில் நடக்கும் தேசியப் போட்டியில் பங்கேற்க இருக்கிறேன். விளையாட்டின் மூலம் மதுரை மாவட்டத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன்’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: