புதிய கட்டிட வரன்முறை திட்டத்தில் கொடைக்கானல் மக்களின் வாழ்வியலை பாதுகாக்க நடவடிக்கை

பழநி, ஜூலை 11:  கொடைக்கானலுக்கு கொண்டுவரப்பட உள்ள புதிய கட்டிட வரன்முறை திட்டத்தில் மக்களின் வாழ்வியலை பாதுகாக்க ஐ.பி செந்தில்குமார் எம்ல்ஏ  கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து சட்டமன்றத்தில் அவர் பேசியதாவது, ‘கொடைக்கானலில் விதிமுறை மீறி கட்டப்பட்டதாக விடுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் நகராட்சியின் கடும் நடவடிக்கைகளுக்கு ஆளாகி உள்ளன. இதனால் கொடைக்கானல்வாசிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக புதிய கட்டிட வரன்முறைத்திட்டம் தற்போது அரசால் நடைமுறைக்கு கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் புதிய கட்டிட வரன்முறையில் மக்களின் வசதிக்காக பல்வேறு திருத்தங்களையும், ஏற்கனவே கட்டிட வரன்முறை இல்லாத கட்டிடங்களுக்கு  ஒருமுறை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கொடைக்கானல்வாசிகளுக்கு வாழ்வியலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: