மாவட்டம் சாணார்பட்டி அருகே 24 மணிநேர டாஸ்மாக்கால் இம்சை அகற்ற கோரிக்கை

கோபால்பட்டி, ஜூலை 11: சாணார்பட்டி அருகே 24 மணிநேரம் செயல்படும் டாஸ்மாக் கடையால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாணார்பட்டி அருகேயுள்ளது சிலவத்தூர் கிராமம். இங்கு 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிலவத்தூர்- செந்துரை சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு அறிவித்த நேரம் மட்டுமின்றி மற்ற நேரங்களிலும் மது விற்பனை ஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இங்கு அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. இதுகுறித்து போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertising
Advertising

இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சிலுவத்தூர் டாஸ்மாக் கடையில் 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இந்த டாஸ்மாக் சுற்றி வங்கிகள், பெட்ரோல் பங்குகள், வாரச்சந்தைகள் உள்ளன. இதனால் மது அருந்தி வருபவர்களால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. தவிர இக்கடையை தாண்டிதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். இதனால் மாணவ, மாணவிகள் ஒருவித அச்சத்துடனே கடையை கடந்து வருகின்றனர். மேலும் கடை அருகே பிரதான சாலை செல்வதால் மது அருந்தியவர்கள் கடக்கும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆளும்கட்சியில் உயர்பதவியில் உள்ள உறவுக்கார பார் என்பதால் புகார் கொடுத்தும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் சட்டவிரோதமாக 24 மணிநேரம் செயல்படும் இந்த டாஸ்மாக்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: