திண்டுக்கல்லை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை

திண்டுக்கல், ஜூலை 11: திண்டுக்கல்லை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திண்டுக்கல் நகரின் பல இடங்களில் கஞ்சா விற்கப்படுவதாக எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து எஸ்ஐ வடிவேல் தலைமையிலான போலீசார் செட்டிநாயக்கன்பட்டி இபிகாலனியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவரது வீட்டில் 24 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக செந்தில்குமார், அவரது மனைவி ரேவதி (38), மகன் சூர்ய பிரகாஷ் (20) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல்லை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்துவது அம்பலமாகியுள்ளது.

Advertising
Advertising

மையமான திண்டுக்கல்ஆந்திர மாநிலம் பாடகிரியில் இருந்து கஞ்சாவை காரில் கடத்தி வரும் கும்பல் அதை திண்டுக்கல்லில் மையாக வைத்து பல இடங்களுக்கு பிரித்து அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இங்கிருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஒரு பிரிவாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகருக்கு மற்றொரு பிரிவுவாகவும் பிரித்து அனுப்பப்படுகிறது.  தேனி, கம்பம், கேரளாவிற்கும் அதிகளவு கடத்தப்படுகிறது. ஆந்திராவில் இருந்து வரும் கார் திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் நிறுத்தப்படும். இங்கிருந்து அந்த கார் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும். மதுரை மார்க்கமாகவாக இல்லை கேரளா மார்க்கமாகவே என்பதை மொபைல் போனில் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும். இதற்கு கோட்வேர்டில் ஒரு துண்டு சீட்டையும் பயன்படுத்துகின்றனர். சரக்கு இன்று தேவையில்லை, நாளைக்கு வாருங்கள் என்றால் காருடன் திண்டுக்கல்லில் உள்ள லாட்ஜில் தங்கி விடுவார்கள். இவ்வாறு தங்கிய கும்பலை கடந்த மாதம் மத்திய போதை பொருள் தடுப்ப பிரிவினர் கைது செய்து, சென்னைக்கு அழைத்து சென்றனர்.

கண்காணிக்கும் உளவு பிரிவு  திண்டுக்கல்லை மையமாக வைத்து கஞ்சா கடத்துவதற்கு, இந்த கும்பலுக்கு பின்னணியில் சிலர் திண்டுக்கல்லில் உள்ளனர். இவர்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், உளவு பிரிவு போலீசார், எஸ்பி தனிப்படை போலீசாரை தாங்களே உளவு பிரிவு அமைத்து கண்காணித்து, கஞ்சா கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவிப்பார்கள். மேலும் திண்டுக்கல்லை சுற்றி மதுரை, திருச்சி, கோவை, சேலம் உட்பட பல பகுதிகளுக்கு பைபாஸ் ரோடு செல்கிறது. இந்த ரோட்டில் கார்களில் நின்றபடி போலீசார் நடமாட்டத்தை கண்காணித்து கஞ்சா கடத்தல் கும்பலுக்கு தகவல் தெரிவிப்பார்கள். இந்த பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீஸ் விசாரணையில் பகீர் தகவல் 24 கிலோ பறிமுதலில் குடும்பமே கைதுமழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்பு.மழையால் மகிழ்ச்சிஆந்திராவில் இருந்து வரும் கார் திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில்  நிறுத்தப்படும். இங்கிருந்து அந்த கார் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும்.  மதுரை மார்க்கமாகவாக இல்லை கேரளா மார்க்கமாகவே என்பதை மொபைல் போனில்  அவர்களுக்கு தகவல் கொடுக்கப்படும். இதற்கு கோட்வேர்டில் ஒரு துண்டு  சீட்டையும் பயன்படுத்துகின்றனர்.

Related Stories: