எங்க பார்த்தாலும் குண்டு, குழி 24 மணிநேர டாஸ்மாக்கால் இம்சைகுறட்டையில் போதை தடுப்பு

திண்டுக்கல்லில் இதுவரை ஆயிரக்கணக்கான கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. ஆனால் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இதுவரை பெரியளவில் யாரையும் கண்டுபிடிக்கவில்லை. லோக்கல் போலீசார் கண்டுபிடித்து கொடுத்தால் சந்தோஷமாக சிக்கியவர்களை கைது செய்கிறார்கள். இல்லாவிட்டால் மத்திய போதை போலீசார் திண்டுக்கல்லில் வந்து கஞ்சா கும்பலை கைது செய்கின்றனர். இப்படி ஆழ்ந்த தூக்கத்திலே போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளனர். காரணம் கேட்டால் எங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளனர். ஏற்கனவே போட்ட வழக்குகளுக்கு கோர்ட்டில் ஆஜராகவே எங்கள் போலீசாருக்கு நேரம் இல்லை.  ரோந்து செல்வதற்கு நேரமும், ஆட்களும் இல்லை. திண்டுக்கல் மாவட்டம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் மலைப்பகுதிக்கு சென்று கண்காணிப்பதே இல்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை. ஆட்கள் கூடுதலாக நியமிக்க அரசிடம் கேட்டு வருகிறோம். பதில் எதுவும் இல்லை என்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: