பக்தர்கள் ஏக்கம் குடிமராமத்து பணியை குறிப்பிட்ட சங்கத்தை மட்டும் வைத்து செய்வதா?

செம்பட்டி, ஜூலை 11: கொடைரோடு அருகே தெப்பன்குளம் கண்மாயில் குடிமராமத்து பணிக்கு குறிப்பிட்ட சங்கத்தை மட்டும் வைத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயக்கட்டு விவசாயிகள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே குல்லக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட தெப்பன்குளம் கண்மாயில் குடிமராமத்து பணிகள் செய்ய தமிழக அரசு ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்காக கடந்த ஜூலை 4ம் தேதி பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீரினை பயன்படுத்துவோம் சங்கத்தினர் பூமிபூஜை போட்டனர். தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பள்ளபட்டியில் விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. திண்டுக்கல் ஆர்டிஓ உஷா தலைமை வகிக்க, நிலக்கோட்டை உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், வருவாய்த்துறை மண்டல துணை தாசில்தார் ருக்மணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழக அரசு கண்மாய் தூர்வாருதல், கழுங்கு சரி செய்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முள்செடிகள் வெட்டி கரை சீமைத்தல் ஆகிய குடிமராமத்து பணிகள் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

இப்பணியை ழுழுக்க முழுக்க விவசாயிகள் மூலம் செய்வதே குடிமராமத்து பணியாகும். இதற்காக குறிப்பிட்ட நீர்பாசன விவசாய சங்கத்தை வைத்து பணிகள் செய்ய பூமிபூஜை போட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு தெப்பன்குளம் கண்மாய் நீரை பயன்படுத்தும் ஆயக்கட்டு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீர்பாசன விவசாய சங்கம் பதிவு செய்வது, குடிமராமத்து பணி செய்வது குறித்து, தெப்பன்குளம் கண்மாய் நீரை பயன்படுத்தும் ஆயகட்டு விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. சங்கத்தேர்தல் நடத்தப்படவில்லை. அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் இரு பிரிவினர்களாக விவசாயிகள் இருப்பதால், ஒருங்கிணைந்தால் மட்டுமே குடிமராமத்து பணிகள் செய்ய முடியும் என கூறி கூட்டத்தை பாதிலேயே முடித்து விட்டு புறப்பட்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நிலக்கோட்டை- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அம்மையநாயக்கனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘நீர்பாசன விவசாய சங்கம் என்ற பெயரில் ஒருவர் சங்கம் வைத்து கொண்டு, அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்த முயல்கிறார். இதற்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். உண்மையாக தெப்பன்குளம் கண்மாய் நீரை பயன்படுத்தும் ஆயகட்டு விவசாயிகளான நாங்கள்தான் குடிமராமத்து பணிகளை செய்வோம். நீர்பாசன விவசாய சங்கம் என்ற பெயரில், சங்க தேர்தல் நடத்தாமல், நிர்வாகிகள் தேர்வு செய்யாமல் உள்ள அந்த சங்க நிர்வாகி மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: