கடைக்காரர்கள் ஆவேசசம் காலமுறை ஊதியம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆக.13ல் சென்னையில் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல், ஜூலை 11: காலமுறை ஊதியம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆக.13ல் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக மாநில பொது செயலாளர் திருச்செல்வம் தெரிவித்தார். திண்டுக்கல் சிஐடியூ அலுவலகத்தில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராமு தலைமை வகிக்க, கவுரவ தலைவர் மகாமுனி முன்னிலை வகித்தார். பொது செயலாளர் சீனிவாசன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் கோபால் வரவு, செலவு அறிக்கை தாக்கம் செய்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் கணேசன் மாநாட்டை துவங்கி வைத்தார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாநில பொது செயலாளர் திருச்செல்வம் பேசியதாவது, ‘டாஸ்மாக் ஊழியர்கள் 16 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். காலமுறை ஊதியம் கோரி 3 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது தொகுப்பூதியத்தில் ரூ.2 ஆயிரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் எங்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்பது தெரிகிறது.

Advertising
Advertising

மதுக்கடைகளில் ஆய்வுக்காக வரும் அதிகாரிகள் ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு

வெளிப்படையான பொதுமாறுதல் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும். டாஸ்மாக அலுவலகங்களில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு நடத்தப்படும் தேதி, பாடத்திட்ட விபரம் தெரிவிக்கப்படவில்லை. எனவே தேர்வு பற்றி முழு விபரத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக ஊழியர்களின் முன்வைப்பு தொகைக்கு, வட்டி மற்றும் விற்பனையான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. டாஸ்மாக் மதுக்கடைகளில் அனுமதியில்லாத பார்கள் செயல்படுவதால் அரசுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும். காலி அட்டை பெட்டிகளை விற்பனை செய்ய ஊழியர்களை கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 13ம் தேதி சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றார்.

Related Stories: