பழநி அருகே பெண் கஞ்சா வியாபாரிக்கு ஒரு ஆண்டு சிறை

பழநி, ஜூலை 11: பழநி அருகே பெண் கஞ்சா வியாபாரிக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து சப்.கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். பழநி அருகே பாப்பம்பட்டி, முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாண்டி மனைவி பாப்பாத்தி (57). பழநி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யமாட்டேன் என பிணைவு கடிதம் எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பாப்பம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது பழநி தாலுகா போலீசாரால் பாப்பாத்தி கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்து வந்ததால் பாப்பாத்தியை பழநி தாலுகா போலீசார் சப்கலெக்டர் அருண்ரான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சார் ஆட்சியர் அருண்ராஜ் நடத்திய விசாரணையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 110ன் கீழ் பாப்பத்தியை 1 வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் பாப்பாத்தியை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, பின் சிறையில் அடைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: