கூட்டுறவு வங்கி சார்பில் பணமில்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி, ஜூலை.11: திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நபார்டு வங்கியுடன் இணைந்து சுய உதவிக்குழுக்களுக்கு நிதிசார் கல்வி முகாம் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வுக்கூட்டம் திருச்சியில் நடந்தது.மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி, பொது மேலாளர் பிரபாகரன், நபார்டு வங்கியின் உதவிப்பொது மேலாளர் ராஜாராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களிலும், மத்திய வங்கி கிளைகள் மூலமாகவும் விரைவில் வாடிக்கையாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு நிதிசார் கல்வி முகாம் மூலமாக பணமில்லா பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வுக்கூட்டம் நடத்த உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: