திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் அதிகாரிகள் சமரசம்

திருச்சி, ஜூலை 11: திருச்சி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பிளம்பர், எலக்ட்ரீசியன், லேப், சலவை, கேஸ் ஆப்ரேட்டர், ஓபி சீட்டு வழங்கும் கணினி ஆப்ரேட்டர், ஆண் ெசவிலியர், பெண் ெசவிலியர்களுக்கு உதவியாளர் போன்ற பணிகளுக்கு பாரத் மேன்பவர் ஏஜென்சி மூலம் 140 ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும். கலெக்டர் தீர்மானித்த கூலியை கொடுக்காத மருத்துவமனை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர் சதீசுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும் என வலியுறுத்தி சிஐடியூ சார்பில் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று மருத்துவமனை வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் ஆபரேட்டர்கள் வராததால் வளாகத்தில் உள்ள குழாய்களில் தண்ணீர் வரவில்லை. சலவை பணிகள், ஓபி சீட்டு கொடுக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது.இதையடுத்து மேற்கு தாசில்தார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்டிஓ தலைமையில் நாளை (12ம் தேதி) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து தீர்வு காணப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை ஒப்பந்த தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டதையடுத்து அவர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: