50 சதவீத இட ஒதுக்கீடு, தகுதிக்கேற்ற ஊதியம் கோரி திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உண்ணாவிரதம்

திருச்சி, ஜூலை 11: அரசு டாக்டர்களுக்கு மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று அரசு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.அரசு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்த வேண்டும். தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும். எம்சிஐ விதிப்படி மட்டுமே அல்லாமல் நோயாளிகள் சேவைக்கு ஏற்ப மருத்துவர்கள் பணி இடங்களுக்கான அரசாணையை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை அரசு டாக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு டாக்டர்கள் கேசவன், சுவாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அருளீஸ்வரன் உள்பட ஏராளமான டாக்டர்கள் கலந்து கொண்டனர். இதுபோல சென்னை, நெல்லை, சேலம் ஆகிய இடங்களிலும் டாக்டர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

Related Stories: