×

திருவண்ணாமலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அதிகாரிகள் நடவடிக்கை

திருவண்ணாமலை, ஜூலை 11: திருவண்ணாமலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். திருவண்ணாமலை அருகே வனப்பகுதியைொட்டியுள்ள விவசாயிகள், வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் மாவட்ட வனத்துறை அலுவலர் கிருபாசங்கர், ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி வனச்சரகர் மனோகரனுக்கு உத்தரவிட்டார்.அதன்பேரில், கடந்த வாரம், மாத்தூர், நாச்சானந்தல் கிராமத்தில் வனப்பகுதியையொட்டியுள்ள வனப்பகுதிக்கு சொந்தமான இடத்தனை ஆக்கிரமித்துள்ள பகுதியில், வருவாய் துறையினர் மூலம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது, வனத்துறைக்கு சொந்தமான இடம் அதிகளவில் வனப்பகுதியையொட்டியுள்ள விவசாயிகள் ஆக்கிரமித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் துறை அலுவலர்கள் மூலம் வனப்பகுதிக்கு சொந்தமான இடங்கள் அளவிடும் பணி கடந்த வாரம் நடந்தது.

இந்நிலையில் நேற்று வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை அளவீடு செய்யப்பட்ட இடத்தில், வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனவர் முருகன், காளிதாஸ், வனக்காப்பாளர்கள் ராஜேஷ், பாலாஜி மற்றும் வனத்துறை ஊழியர்கள் வனத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் குறியீடு கற்களை நட்டனர். மேலும், இனி வனத்துறைக்கு சொந்தமான இடத்தினை எவரேனும் ஆக்கிரமிப்பு செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...