திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை, கொள்ளையை தடுக்க 2,500 சிசிடிவி பொருத்த திட்டம் முதல்கட்டமாக 2,000 கேமரா ‘சக்சஸ்’

திண்டுக்கல், ஜூலை 10: திண்டுக்கல்  மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளையை தடுக்க 2 ஆயிரத்து 500 இடங்களில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இதில்  முதல்கட்டமாக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல்  மாவட்டம் மதுரை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர்,  சிவகங்கை, தேனி உட்பட பல மாவட்டங்களுக்கு மையாக உள்ளது. மேலும் இங்கு  சர்வதேச சுற்றுலாத்தலமாக கொடைக்கானல் உள்ளது. பக்தர்களை பரவசப்படுத்தும்  பழநி உள்ளது. இதனால் திண்டுக்கல் வழியாக லட்சக்கணக்கான பயணிகள் வந்து  செல்கின்றனர். இதை பயன்படுத்தி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள்  திருட்டு, கொள்ளை, செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு ஈடுபடுபவர்கள்  தப்பித்து செல்வதற்கு வசதியாகவும் உள்ளது. மேலும் கொலைகள் செய்பவர்கள்,  கொலை செய்யப்பட்ட உடல்களை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில்  எங்காவது வீசி விட்டு செல்கின்றனர். கடந்தாண்டு மதுரை .உசிலம்பட்டி அருகே  கொலை செய்து விட்டு, நத்தம் கரந்தமலையில் பிணத்தை வீசி விட்டு சென்றனர்.   கொடைக்கனால் மலையிலும் கொலை செய்து பிணத்தை வீசுவதும் தொடர்கதையாக உள்ளது.  இதை கண்டுபிடிப்பதற்குள் போலீசாருக்கு போதும், போதும் என்றாகி விடுகிறது.  இதனால் கொலையாளிகள், செயின் திருடர்கள், வாகனம் திருடுபவர்கள், வீட்டின்  பூட்டை உடைத்து திருடுபவர்களை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டனர்.

Advertising
Advertising

Related Stories: