2,500 சிசிடிவி பொருத்த திட்டம்

திண்டுக்கல்  மாவட்டம் முழுவதும் பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழி, வங்கிகள்,  நகைக்கடை பஜார், தியேட்டர், டூவீலர் ஸ்டாண்ட், மார்க்கெட், அரசு  மருத்துவமனை, சந்தைகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் 2,500 கணகாணிப்பு  கேமராக்கள் பொருத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 2  ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டது. மீதியுள்ளதை விரைவில்  பொருத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘திண்டுக்கல்  மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு முக்கியத்துவம் தந்து கேமராக்களை பொருத்தி  வருகிறோம். இதேபோல ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு ஏராளமான கேரளா  வியாபாரிகள் காய்கறிகள் வாங்குவதற்கு வருகிறார்கள். இவர்களை கண்காணிக்கவும்  மார்க்கெட்டை சுற்றி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பிற மாவட்டங்களில்  இருந்து திண்டுக்கல்லுக்கு நுழையும் எல்லைகள், கிராமங்களில் வாரம்தோறும்  கூடும் சந்தைகள், மார்க்கெட்டுகள்,. மக்கள் கூடும் சாலைகள் உட்பட பல  இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2 ஆயிரம்  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.  இன்னும் 500 கேமராக்கள் அடிக்கடி  திருட்டு, செயின் பறிப்பு நடக்கும் பகுதிகளிலும் வைக்கப்படும். இதன்மூலம்  திருடர்கள் எங்கு திருடினாலும் கண்டுபிடிக்கப்படும். சிலர் ஹெல்மெட்  அணிந்து திருடுகிறார்கள், அவர்களின் ஹெல்மெட்டை ஊடுருவி முகத்தை காணும்  வகையில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
Advertising
Advertising

‘அதிவேகம்’ கணக்கெடுப்பு

திண்டுக்கல் எஸ்பி சக்திவேல் கூறியதாவது, ‘கேமராக்கள் பொருத்தும் பணியை  ஆகஸ்ட்டிற்குள் முடிப்பதற்கு தி்ட்டமிட்டுள்ளோம். மேலும் அதிக சிசி கொண்ட  வேகமாக செல்லும் டூவீலர்களை வைத்திருப்பவர்களை போலீசார் கணக்கெடுக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து போலீசார் தினமும் தங்கள் பகுதியில் உள்ள 10  அதிவேகமாக செல்லும் டூவீலர்களை கணக்கெடுக்க வேண்டும். டூவீலர்  வைத்திருப்பவர் பெயர், ஊர், முகவரி, செய்யும் தொழில், அவரின் போட்டோ, பதிவு  எண், பைக்கின் போட்டோவை எடுத்து ஆவணப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம்  பெண்களிடம் அதிவேகத்தில் வந்து செயி்ன பறிப்பவர்கள்  கண்டுபிடிக்கப்படுவார்கள். வெளிமாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்  மாவட்டத்திற்கு வரும் அதிவேகமான டூவீலர்களையும் கணக்கெடுக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றவாளிகள், திருடர்கள் யாரும் தப்ப  முடியாது’  என்றார்.

Related Stories: