போக்குவரத்து நெரிசலை குறைக்க பழநி போஸ்ட் ஆபீஸ் சாலையில் வாகனங்களுக்கு தடை

பழநி, ஜூலை 10: பழநியில் போஸ்ட் ஆபீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்கள் செல்ல மாலை 4 மணிவரை தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழநி தலைமை தபால் நிலையத்தில் இருந்து ரயில்வே பீடர் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையில் 5 வங்கிகளும், வணிக வளாகங்களும், பேக்கரிகளும், உணவகங்களும் அதிகளவு உள்ளன. சில வங்கிகளின் கட்டிடங்களில் வாகனங்கள் நிறுத்த அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. ஆனால், வங்கிகள் வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதில்லை. அதுபோல் வணிக கடைக்காரர்கள் தங்களது கடைகளின் முன்புறம் இரும்பு கம்பிகள் மற்றும் கற்களை அடுக்கி வைத்து கொள்கின்றனர். இதனால் வங்கிகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்பட்டு வந்தது.

Advertising
Advertising

தவிர, ஆட்டோ, கார் போன்ற இலகுரக வாகனங்களும் இச்சாலையில் சென்று வந்தன. இதனால் வேலை நாட்களில் காலை முதல் மாலை வரை இச்சாலையில் கடுமையான போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக நேற்று பழநி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சப்கலெக்டர் அருண்ராஜ் தலைமை வகித்தார். இதில்  நகராட்சி ஆணையர் நாராயணன், டிஎஸ்பி விவேகானந்தன், வங்கி மேலாளர்கள், வணிக நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போக்குவரத்து அதிகமுள்ள பழநி போஸ்ட் ஆபீஸ் சாலையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதிப்பது என்றும், பணம் உள்ளிட்டவை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி கடிதம் வழங்கப்பட்டு அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: