கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஜூலை 10: அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி) மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மேற்கண்ட பிரிவு மாணவ, மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் படிவங்களை பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று 15.10.2019க்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும். 01.09.2019ம் தேதியில் துவங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை 25.10.2019ம் தேதிக்கு முன்பும், புதியதிற்கான விண்ணப்பங்களை 30.11.2019ம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.கூடுதல் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் குறித்து அறியலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: