அம்மையநாயக்கனூர் ஏடிஎம்முக்கு எந்த பராமரிப்பும் இல்லை

செம்பட்டி, ஜூலை 10: அம்மைநாயக்கனூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையம் முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக ஏடிஎம் மிஷினை சுற்றிலும் குப்பைகள் போல் காகித பேப்பர்கள் சுத்தம் செய்யப்படாமல் கிடக்கின்றன. மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் ஏடிஎம் மையம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவு உடைந்து வாசலில் கிடக்கிறது. மர்மநபர்கள் யாரோ உடைத்து விட்டு சென்றுள்ளனர். எனவே ஏடிஎம்மின் கண்ணாடி கதவை சரிசெய்வதுடன் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: