நத்தம் பகுதியில் நிலக்கடலை பயிரில் களை பணி தீவிரம்

நத்தம், ஜூலை 10: நத்தம் பகுதியில் நிலக்கடலை பயிரில் களை எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நத்தம் அருகே கோமணாம்பட்டி, சாத்தம்பாடி, ராஜகோபாலபுரம், மதுக்காரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது செய்த மழையால் மண்ணில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதையொட்டி நிலங்களில் உழவு பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் கடந்த வைகாசி பட்டமாக மானாவாரி நிலங்களில் நிலக்கடலை விதைக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி களை அகற்றும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கோமணாம்பட்டி, சாத்தம்பாடி பகுதிகளில் மானாவாரியாக ஆண்டுதோறும் நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இப்பகுதியில் கடந்த மாதம் பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி வைகாசி பட்டமாக நிலக்கடலை விதைப்பு செய்யப்பட்டது. தற்போது சாரலை தொடர்ந்து களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த கடலை புரட்டாசியில் அறுவடைக்கு வரும். விதைத்ததில் இருந்து சரியான நேரத்தில் மழை பெய்யாததால் செடிகள் முளைப்பு சீராக இல்லை. எனினும் விவசாயத்தை கைவிட முடியாமல் தொடர்ந்து செய்து வருகிறோம். கடலை பூ பிடிப்பதற்கும், பிஞ்சு வைத்து முற்றுவதற்கும் போதிய காலம் உள்ளது. அதற்கான மழை பெய்தால்தான் லாபம் தரும் மகசூலை பெற முடியும்’ என்றனர்.

Related Stories: