நத்தம் 4 வழிச்சாலை பணியில் ‘அலார்ட்’ செய்ய ஆட்கள் இல்லாததால் அடிக்கடி விபத்து

நத்தம், ஜூலை 10: நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலை பணியில் போக்குவரத்து வழிமுறைகள் சொல்ல ஆட்கள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலை பணிகள் சுமார் ரூ.900 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகளில் மனித ஆற்றல் குறைவாகவும், எந்திரங்கள் பயன்பாடே அதிகமாகவும் உள்ளது. இந்நிலையில் நத்தம் அருகே இடையபட்டியில் இப்பணிகள் நடந்து வருகிறது. இங்கு பாரம் ஏற்றி டிப்பர் லாரிகள் முறையாக சாலையிலிருந்து மேடான பகுதிக்கு செல்வதற்கான சரிவு அமைப்பு ஏற்படுத்தவில்லை. மேலும் அவ்வழியாக வரும் போக்குவரத்து வாகனங்களை நிறுத்தியும், டிப்பர் லாரி ஓட்டுனருக்கு போக்குவரத்து ஒழுங்குமுறைக்கான சமிக்ைஞகள் வழங்க அந்த இடத்தில் ஆட்கள் இல்லை. இதனால் நேற்று முன்தினம் மதியம் ஓட்டுனர் ஒருவர் வேகமாக வந்து மேட்டில் ஏற்ற முயன்ற போது லாரி திடீரென கவிழ்ந்தது.

Advertising
Advertising

இதனால் அப்பகுதியில் ஜல்லி கற்கள் மளமளவென கொட்டியதுடன் தூசியும் பரவியது. மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களில் வந்தவர்கள் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர், வாகனங்களில் பயணித்தவர்கள் தப்பியதுடன் விபத்தும் தவிர்க்கப்பட்டது. அப்பகுதியில் பயணித்தவர்கள் கூறுகையில், ‘சாலை பணிகள் நடக்கும் போது போதிய ஆட்களை நியமித்து இவ்வாறு ஜல்லி கற்கள் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு போக்குவரத்து வழிமுறைகள் வழங்க வேண்டும். லாரிகள் ஒதுங்கும் போது அந்த இடங்களில் வாகனங்களில் வருவோரை சற்று நிறுத்தி செல்ல சமிக்ஞைகள் வழங்க வேண்டும். அப்போதுதான் வாகனங்களில் செல்வோர் பாதுகாப்பாக பயணிக்க முடியும்’ என்றனர்.

Related Stories: