சாம்பவர்வடகரையில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலில் காத்திருக்கும் பொதுமக்கள்

சுரண்டை, ஜூலை 10: சாம்பவர்வடகரையில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கின்றனர்.

சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரையில் காமராஜர் சிலை அருகே இருந்த பயணிகள் நிழற்குடை பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. இதனை அகற்றி விட்டு புதிய நிழற்குடை கட்டித்தரவேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பழுதடைந்த பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதுகுறித்து சாம்பவர்வடகரை திமுக இளைஞரணி செயலாளர் முத்து, கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், கடையநல்லூர், கோவிலாண்டனூர், பொய்கை, ஊர்மேலழகியான் போன்ற பகுதிக்கு செல்லும் பொது மக்கள் பஸ்சிற்காக கொளுத்தும் வெயிலில் கால் கடுக்க காத்திருக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி இடிக்கப்பட்ட இடத்தில் புதிய பயணிகள் நிழற்குடையை உடனடியாக  கட்டிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: