ரங்கம் கோயில் உண்டியல்கள் திறப்பு ரூ.46 லட்சம், தங்கம், வெள்ளி வசூல்

திருச்சி, ஜூன் 27: ரங்கம் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.46 லட்சம் ரொக்கம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சி வசூலானது.ரங்கம் ரங்கநாதர் கோயிலில் 52 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை மாதம் தோறும் கணக்கிடப்பட்டு எண்ணப்படும். கடந்த மே 30ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்ப்டடது. அதில் ரூ.77 லட்சம் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை இருந்ததாக கணக்கிடப்பட்டது.இந்த ஜூன் மாதம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. ரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில், அவரது உதவியாளர் உதவி ஆணையர் கந்தசாமி, திருவாணைக்காவல் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சத்தியசாய் பக்தர்கள் குழுவை சேர்ந்த 130 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.இதில், ரூ.46 லட்சத்து 77 ஆயிரத்து 166 ரொக்கம் மற்றும் 128 கிராம் தங்கம், 882 கிராம் வெள்ளி, 203 வெளிநாட்டு பணம் ஆகியவை இருந்தன. கடந்த மே மாதம் சித்திரைத் தேர் திருவிழா, பள்ளி விடுமுறை காலம் என்பதால் உண்டியலில் காணிக்கை தொகை அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: