மனுநீதி முகாமில் கலெக்டர் தகவல் துறையூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்வுக்கு திமுகவினர் ஆட்சேபனை மனு

துறையூர், ஜூன் 27: துறையூர் நகராட்சியில் குடிநீர் கட்டணம் உயர்த்த இருப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.துறையூர் நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம் மற்றும் வைப்பு தொகை உயர்த்த இருப்பதாக அறிவிப்பு செய்திருந்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து துறையூர் நகர திமுக நகர செயலாளர் முரளி தலைமையில், நகராட்சி ஆணையர் நவேந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவருடன் ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், செல்லதுரை, மார்த்தாண்டன், கார்த்திகேயன், மனோகர், சுதா, செங்குட்டுவன், வார்டு செயலாளர்கள் உட்பட திமுகவினர் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம் மற்றும் வைப்பு தொகை உயர்த்த இருப்பதை திமுக வன்மையாக கண்டிகிறது. ஏற்கனவே வீட்டு வரி உயர்வு, தொழில் வரி உயர்வால் துறையூர் மக்கள் மிகவும் கஷ்டபட்டு வருகிறார்கள். துறையூரில் வாரம் ஒருமுறை மட்டுமே காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே குடிநீர் கட்டணம் மற்றும் வைப்பு தொகையை உயர்த்தாமல் சீராக தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: