தினமும் மாலையில் கட்டுமான பணியாளரை திட்டியவர் மீது வழக்கு படியுங்கள் பல்லுயிர் பெருக்கம் இருந்தால்தான் மனிதர்கள் வாழ முடியும்

திருச்சி, ஜூன் 27: மத்திய அரசு பல்லுயிர் பெருக்க சட்டம் கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் வட்டார அளவில் பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு அமைத்து, அப்பகுதியில் உள்ள தாவரங்கள், மரங்கள், பூச்சிகள், உயிரினங்களை பாதுகாத்து, அழியும் நிலையில் உள்ளவற்றை மீட்டு வளர்க்க வேண்டும். இக்குழுவில் உள்ளாட்சி நிர்வாகிகள் தலைவராக இருப்பர். அப்பகுதி வனத்தலைவர் செயலாளராக இருப்பார். விவசாயிகள், என்ஜிஓக்கள் இக்குழுவில் இடம்பெற வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) தான் குழுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி, கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்லுயிர் பெருக்க மேலாண்மை குழு தலைவர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடந்தது.

முகாமை திருச்சி முதன்மை வனப்பாதுகாவலர் மஞ்சுநாதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட வனஅலுவலர் சுஜாதா முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட (டிஆர்டிஓ) இயக்குனர் சங்கர் மற்றும் நான்கு மாவட்ட பிடிஓக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ‘உங்கள் பகுதியில் உள்ள தாவரங்கள், உயிரினங்கள் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். அவற்றை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ தேவைக்காக பல்வேறு மூலிகை செடிகள் பறிக்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒரு பகுதியில் ஆவாரம்பூ அதிகம் உள்ளது என்றால், அதை மருத்துவத் தேவைக்காக ஒரேயடியாக பறிக்க அனுமதிக்காதீர்கள். தாவரங்களை ஒட்டுமொத்தமாக பறித்துச் செல்வதால் மீண்டும் அவை அங்கு வளராமல் போகும் நிலை வரும். எனவே மீண்டும் அவை வளர வேண்டும் என்பதற்காக கொஞ்சமாவது விட்டு வையுங்கள். அவ்வாறு பறிப்பவர்களிடம் கட்டணம் வசூலித்து பல்லுயிர் பெருக்கத்தக்கு பயன்படுத்துங்கள். பல்லுயிர் பெருக்கம் இருந்தால்தான் மனிதர்களால் வாழ முடியும். உலக உணவு, உயிரினச் சங்கிலி தொடர் அறுந்துவிடாமல் பாதுகாப்பது நமது கைகளில் உள்ளது’ என வலியுறுத்தப்பட்டது.

Related Stories: