பயிற்சி முகாமில் வலியுறுத்தல் பாரதிதாசன் பல்கலை. மகளிரியல் துறை சார்பில் தொழில் முனைவோருக்கான 2 நாள் கருத்தரங்கம்

திருச்சி, ஜூன் 27: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து ‘பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் மற்றும் அரசு திட்டங்கள்’ என்ற தலைப்பில், 2 நாள் கருத்தரங்கம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நாளை துவங்குகிறது.ஆண்கள், பெண்கள், மாற்று திருநங்கைகள், மாணவ, மாணவிகள், சுய தொழில் மாநாட்டில் கலந்துகொள்ளலாம். பல்வேறு வகையான தொழில் மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கம். தொழில் தொடங்க நிதியுதவி, மூலப்பொருட்கள், சந்தைவாய்ப்புகள், மின் சந்தை வாய்ப்புகள், திறன் பயிற்சி, தொழில் துவங்க வழிகாட்டுதல் மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும், பல்வேறு மத்திய மற்றும் மாநில தொழில் திட்டங்கள் குறித்தும் 20 முதல் 30 கருத்தாளர்கள் கொண்டு தொழில் விளக்கம் மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு துறைகளான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு அமைச்சகம், தமிழ்நாடு ஆதி திராவிடர் மேம்பாட்டு திட்டம், தமிழ்நாடு அரசு கிராம வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், சிறு தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம், தேசிய சிறு தொழில்கள் நிறுவனம், தொழில் மேம்பாட்டு நிறுவனம், திறன் மேம்பாட்டு நிறுவனம் போன்ற அரசுத்துறை அலுவலர்கள், தேசிய வங்கிகள், தொழில் சங்கங்கள், ட்ரெக் ஸ்டெப்பில் பயிற்சி பெற்ற தொழில் முனைவோர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், கைவினை தொழில் நிறுவனம், பெண்களுக்கான பிராந்தி தொழில் பயிற்சி மையம், இந்திய உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழில் நுட்ப நிறுவனம், வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான தேசிய வங்கிகள், போன்ற நிறுவனங்களில் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கிற்கு கருத்தாளர்களாக பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளனர். தொழில் துறையில் சாதிக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் என தொழில் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: